தனுஷ் – அக்ஷையா திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், திருமணத்தில் நடிகர் நெப்போலியன், எங்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகள் மரு மகள் தான் அவள் என நெப்போலியன் கூறியுள்ளார்.
தனது மூத்த மகன் தனுஷ்க்கு திருமணம் செய்து வைத்த நடிகரும் தொழிலதிபருமான நெப்போலியன், திருமணம் மற்றும் தனது மருமகள் குறித்து உருக்கமாக பேசியது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அரசியலில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார்.
ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் நெப்போலியனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகன் தனுஷ் சிறுயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில, அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியன், அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இதனிடையே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மூத்த மகன் தனுஷ்க்கு திருமணம் செய்ய முடிவு செய்த நெப்போலியன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அக்ஷையா என்ற பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் இந்த திருமணம் ஜப்பானில் நடைபெறும் என்று நெப்போலியன் அறிவித்திருந்தார். அதன்படி, திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றிருந்தனர். இதனிடையே தனுஷ் – அக்ஷையா இருவரும் திருமணத்திற்கு முன்பு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது தனுஷ் – அக்ஷையா திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், திருமணத்தில் நடிகர் நெப்போலியன், எங்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகள் மரு மகள் தான் அவள். எவ்வளவோ பெயர் புகழ் சம்பாதித்தாலும், என் மகனின் சூழல் தெரிந்தும் உங்கள் மகனுக்கு எங்கள் மகளை தருகிறோம் என்று, சொன்னார்கள். அவர்கள் கிரேட். அதேபோல் என் மகனை பற்றி தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்ன இந்த பெண், பெரிய தியாகம் செய்கிறார்.
ஊரில் கிராமத்தின் வெளிப்புறத்தில் காவல் தெய்வம் இருக்கும் என்று சொல்வார்கள். அதேபோல், இவர்கள் அனைவரும் எங்களுக்கு சாமி. அதில் இந்த பெண் தான் மூலஸ்தர். முக்கியமான சாமி எங்கள் குலதெய்வம். எங்கள் வீட்டுக்கு குத்து விளக்கு ஏற்ற வர குலதெய்வம் தான் இந்த பெண். இந்த திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.