மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவி சுசானா கானின் காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை விவாகரத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிரிந்து செல்லும் வழக்கம் ஆரம்பித்துள்ளது.
இருவர் மனதும் இணைந்தால் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாழும் பிரபலங்கள் அதே போல மனம் ஒத்துப் போகவில்லை இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டாலும் சண்டை எல்லாம் போட்டுக் கொள்ளாமல் ஜென்டில்மேன் போல விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்தாகி பிரிந்தாலும் குழந்தைகளை சேர்ந்து வளர்ப்பது, சேர்ந்து வேலை செய்வது என்றும் தாங்கள் எந்தளவுக்கு பண்பட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டி வருகின்றனர். ஹ்ரித்திக் ரோஷன் தற்போது செய்துள்ள செயலும் அப்படியே பார்க்கப்படுகிறது.
மனைவியை பிரிந்த ஹ்ரித்திக் ரோஷன்: நடிகர் ஜெயம் ரவி 2 ஆண் குழந்தைகளை பெற்ற நிலையில், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து அவரை பிரிந்தது போலவே 2 ஆண் குழந்தைகளை முன்னாள் மனைவி சுசானா கானுடன் இணைந்து பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் அவரை விட்டுப் பிரிந்து விட்டார். 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஹ்ரித்திக் ரோஷன் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
நடிகையுடன் லிவிங் டுகெதர்: 50 வயதை கடந்த ஹ்ரித்திக் ரோஷன் சபா ஆசாத் எனும் இளம் நடிகையை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரை போலவே அவரது முன்னாள் மனைவியும் அர்ஸ்லான் கோனி என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இருவரும் திருமணம் செய்யாமல் தங்கள் புதிய பார்ட்னர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இருவரும் இணைந்து தங்களின் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கின்றனர்.
பிறந்தநாள் வாழ்த்து: மனைவியின் பாய் ஃப்ரெண்டாக வலம் வரும் அர்ஸ்லான் கோனியின் பிறந்தநாள் கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், “ஹேப்பி பர்த்டே மை ஃபிரெண்ட்” என ஹ்ரித்திக் ரோஷன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது பாலிவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் உடன் இணைந்து நடித்த ஃபைட்டர் திரைப்படம் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. அடுத்ததாக வார் 2 படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.