ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படம்.. ஹீரோயின் இவங்களா?.. செமயா இருக்குமே

0

ஹைதராபாத்: ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியடைந்த அப்படத்துக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தினார். ஆர்ஆர்ஆர் படத்தை முடித்த பிறகு அடுத்ததாக மகேஷ் பாபுவை ஹீரோவாக படம் இயக்குகிறார் ராஜமௌலி. இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் பிரமாண்டமான இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ராஜமௌலி. ஈயை வைத்து ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர். அதனையடுத்து பாகுபலி படத்தை இயக்கிய அவர் இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராக மாறினார். அந்தப் படம்தான் தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் இயக்கிய பாகுபலி 2 படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ராஜமௌலியின் கரியரை உச்சக்கட்டத்தில் கொண்டு சென்று நிறுத்தியது.

ஆர்ஆர்ஆர்: பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட்டானதை அடுத்து ராஜமௌலியின் இயக்கம் என்றாலே கோலிவுட், பாலிவுட் உள்ளிட்ட திரைத்துறைகளில் பலத்த எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. சூழல் இப்படி இருக்க ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோரை வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார் அவர். அந்தப் படமும் இந்திய அளவில் மெகா ஹிட்டானது. மேலும் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அந்தப் படம் வசூல் செய்து தெலுங்கு சினிமாவின் வணிகத்தை மேலும் உயர்த்தியது.

குவிந்த விருதுகள்: வணிக ரீதியாக மெகா ஹிட்டான அந்தப் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படித்தான் ரெஸ்பான்ஸை பெற்றது. முக்கியமாக ஹிந்துத்துவா சிந்தனையை அடிப்படையாக வைத்துதான் அப்படத்தை ராஜமௌலி இயக்கினார் என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும் படத்துக்கு தேசிய விருது முதல் ஆஸ்கர் விருதுவரை கிடைத்தது. படத்துக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

பப்லுவின் முன்னாள் காதலி ஷீத்தலுக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

அடுத்த படம்: இந்திய அளவில் மட்டும் அறியப்பட்டுக்கொண்டிருந்த ராஜமௌலியை ஆர்ஆர்ஆர் படம் உலகளவில் அடையாளப்படுத்தியது. இதனையடுத்து அவர் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. அதன்படி மகேஷ் பாபுவை வைத்து அவர் அடுத்ததாக படம் இயக்கவிருக்கிறார். அந்தப் படம் அநேகமாக மகாபாரத்தை அடிப்படையாக வைத்து உருவாகலாம் என்று தெலுங்கு திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

BB8: VJS ஃபையர் மோட்.. ஆட்டிடியூட் காட்டிய அன்ஷிதா.. வெச்சு விளாசிய விஜய் சேதுபதி.. தரமான செய்கை!

யார் ஹீரோயின்?: படத்தில் இதுவரை மகேஷ் பாபு மட்டும் கன்ஃபார்ம் ஆகியிருக்கிறார். கீரவாணிதான் இசையமைக்கவிருக்கிறார். மேலும் படத்தில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார் என்று தகவல்கள் கசிந்திருக்கின்றன.

Share.

Leave a Reply