நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்தனது வருங்கால மனைவியுடன் போட்டாஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷ்க்கு திருமணம் செய்ய உள்ளதாக நிச்சயதார்த்தம் நடத்திய நிலையில், தற்போது தனுஷ் தனது வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். எட்டுப்பட்டி ராசா படத்தின் மூலம் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நெப்போலியன்.
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார். ஆனால் தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியன், அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தனது மனைவி ஜெயசுதா, மகன்கள் தனுஷ் மற்றும் குணால் ஆகியோருடன் கலிபோர்னியாவில் குடியேறியுள்ள நெப்போலியன், அமெரிக்காவில் தொழிலதிபராக வலம் வருகிறார். இதனிடையே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மூத்த மகன் தனுஷ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனா நடிகர் நெப்போலியன் தற்போது தனது மகன் தனுஷ்க்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அக்ஷையா என்ற பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனிடையே தனுஷ் – அக்ஷையா இருவரின் திருமணம் நெருங்கி வரும் நிலையில் தற்போது இருவரும் போட்டோஷூட் எடுத்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக, தமிழ் சினிமா நட்சத்திரங்க்ள பலரும் ஜப்பான் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.